பக்கம் எண் :

குணநலஞ் சான்றோர் நலனே பிறநல
மெந்நலத் துள்ளதூஉ மன்று.

 

சான்றோர் நலன் குணநலமே - சான்றோர் நலமாவது குணங்களாலான நலமே; பிற நலம் எந்நலத்து உள்ளதும் அன்று - மற்ற உறுப்பு நலம் ஒரு நலத்தோடுங் கூட்டன்று.

குடிப்பிறப்பு, கல்வி முதலியனவாக நூலோரால் வகுக்கப்பெறும் எந்நலத்தோடும் சேர்த்தெண்ணப் படாமையால், உறுப்பு நலத்தை 'எந்நலத் துள்ளதூஉ மன்று' என்றார். 'உள்ள தூஉம்' இன்னிசை யளபெடை; ஏகாரம் பிரிநிலை.