பக்கம் எண் :

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.

 

நோன்மை கொல்லாமையைத் தனக்குரிய அறங்களுள் சிறப்பாகக் கொண்டுள்ளது; சால்பு பிறர் தீமை சொல்லா நலத்தது- அதுபோலச் சான்றாண்மை பிறர் குற்றத்தைச் சொல்லாமையைத் தனக்குரிய குணங்களுள் சிறப்பாகக் கொண்டுள்ளது.

'நலம்' ஆகுபொருளது. இக்குறள் எடுத்துக்காட்டுவமை.