பக்கம் எண் :

இன்மை யொருவற் கிளிவன்று சால்பென்னுந்
திண்மையுண் டாகப் பெறின்.

 

சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சான்றாண்மை யென்று சொல்லப்படும் உரம் வாய்ந்திருப்பின் ; ஒருவற்கு; இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு வறுமை இழிவாகாது.

உள்ளத்திற்கு உறுதியுண்டாக்குதலின், சால்பு உரமாயிற்று. இன்மை பொருளின்மை, 'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே" (மூதுரை,4) என்பதாம்.