பக்கம் எண் :

பண்புடையார் பட்டுண் டுலக மதுவின்றேன்
மண்புக்கு மாய்வது மன்.

 

உலகம் பண்பு உடையார்ப் பட்டு உண்டு - உலக நடப்பு பண்புடையாரிடத்துப் படுதலால் இடையறாது தொடர்ந்து வருகின்றது; இன்றேல் அது மண்புக்கு மாய்வது-அங்ஙனமில்லாக்கால் அது மண்ணுட் புகுந்து மறைந்து போவதாம்.

இது "உண்டா லம்மவிவ் வுலகம்... பிறர்க்கென முயலுநருண்மையானே." என்னும் புறப்பாட்டின் (182) கருத்தை யொத்தது. படுதல் அமைதல்.' உலகு ' ஆகுபெயர்.பண்பிலார் சார்பின்மையால் அது மண்புக்கு மாயவில்லை என்னுங் கருத்துப்பட நின்றமையின், ' மன் ' ஒழியிசையிடைச்சொல். இந்நான்கு குறளாலும் பண்புடையார் உயர்வு கூறப்பட்டது.