பக்கம் எண் :

நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை.

 

நண்பு ஆற்றாராகி நயம் இல செய்வார்க்கும் - தம்மொடு நட்புக்கொள்ளாது தமக்குத் தீமையே செய் தொழுகுவாரிடத்தும் ; பண்பு ஆற்றார் ஆதல் கடை -தாம் பண்புடையராயொழுகாமை அறிவுடையார்க்குக் கடைப்பட்ட குற்றமாம்.

தாமும் அவர் தன்மையராதலால் 'கடை ' என்றார். உம்மை இழிவு சிறப்பு.