பக்கம் எண் :

நட்பியல்184கலைஞர் உரை

916.

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்

புன்னலம் பாரிப்பார் தோள்.
 

புகழ்ச்சிக்குரிய சான்றோர்  எவரும்,  இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின்
தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார்.
 

917.

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்

பேணிப் புணர்பவர் தோள்.
 

உள்ளத்தில் அன்பு  இல்லாமல் தன்னலத்துக்காக  உடலுறவு கொள்ளும்
பொதுமகளிர்  தோளை,  உறுதியற்ற  மனம்  படைத்தோர் மட்டும் நம்பிக்
கிடப்பர்.
 

918.

ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப

மாய மகளிர் முயக்கு.
 

வஞ்சக  எண்ணங்கொண்ட  "பொதுமகள்" ஒருத்தி யிடம் மயங்குவதை
அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட "மோகினி மயக்கம்" என்று கூறுவார்கள்.
 

919.

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்

பூரியர்கள் ஆழும் அளறு.
 

விலைமகளை விரும்பி  அவள்  பின்னால் போவதற்கும் "நரகம்" எனச்
சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை.
 

920.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திருநீக்கப் பட்டார் தொடர்பு.
 

இருமனம்      கொண்ட       பொதுமகளிருடனும்,     மதுவுடனும்,
சூதாட்டத்தினிடமும்  தொடர்பு  கொண்டு  உழல்வோரை விட்டு வாழ்வில்
அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும்.