தொடக்கம் | ||
வான் சிறப்பு
|
||
11. | வான் நின்று உலகம் வழங்கி வருதலான், தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று. |
11 பதிவிறக்கம் செய்யஉரை |
12. | துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி, துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை. |
12 பதிவிறக்கம் செய்யஉரை |
13. | விண் இன்று பொய்ப்பின், விரிநீர் வியன் உலகத்து- உள் நின்று உடற்றும் பசி. |
13 பதிவிறக்கம் செய்யஉரை |
14. | ஏரின் உழாஅர் உழவர், புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால். |
14 பதிவிறக்கம் செய்யஉரை |
15. | கெடுப்பதூஉம், கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம், எல்லாம் மழை. |
15 பதிவிறக்கம் செய்யஉரை |
16. | விசும்பின் துளி வீழின் அல்லால், மற்று ஆங்கே பசும் புல் தலை காண்பு அரிது. |
16 பதிவிறக்கம் செய்யஉரை |
17. | நெடுங் கடலும் தன் நீர்மை குன்றும், தடிந்து எழிலி- தான் நல்காது ஆகிவிடின். |
17 பதிவிறக்கம் செய்யஉரை |
18. | சிறப்பொடு பூசனை செல்லாது-வானம் வறக்குமேல், வானோர்க்கும், ஈண்டு. |
18 பதிவிறக்கம் செய்யஉரை |
19. | தானம் தவம் இரண்டும் தங்கா, வியன் உலகம் வானம் வழங்காது எனின். |
19 பதிவிறக்கம் செய்யஉரை |
20. | நீர் இன்று அமையாது உலகுஎனின், யார்யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு. |
20 பதிவிறக்கம் செய்யஉரை |