நீத்தார் பெருமை
 
21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும்- பனுவல் துணிவு.

21

பதிவிறக்கம் செய்ய
உரை
 
22. துறந்தார் பெருமை துணைக் கூறின், வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண்டற்று.

22

பதிவிறக்கம் செய்ய
உரை
 
23. இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று, உலகு.

23

பதிவிறக்கம் செய்ய
உரை
 
24. உரன் என்னும் தோட்டியான், ஓர் ஐந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து.

24

பதிவிறக்கம் செய்ய
உரை
 
25. ஐந்து அவித்தான் ஆற்றல், அகல் விசும்புளார் கோமான்
இந்திரனே சாலும், கரி.

25

பதிவிறக்கம் செய்ய
உரை
 
26. செயற்கு அரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கு அரிய செய்கலாதார்.

26

பதிவிறக்கம் செய்ய
உரை
 
27. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான்கட்டே-உலகு.

27

பதிவிறக்கம் செய்ய
உரை
 
28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டிவிடும்.

28

பதிவிறக்கம் செய்ய
உரை
 
29. குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி
கணம் ஏயும், காத்தல் அரிது.

29

பதிவிறக்கம் செய்ய
உரை
 
30. அந்தணர் என்போர் அறவோர்-மற்று எவ் உயிர்க்கும்
செந் தண்மை பூண்டு ஒழுகலான்.

30

பதிவிறக்கம் செய்ய
உரை