இல்வாழ்க்கை
 
41. இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

41

பதிவிறக்கம் செய்ய
உரை
 
42. துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும், இறந்தார்க்கும்,
இல்வாழ்வான் என்பான் துணை.

42

பதிவிறக்கம் செய்ய
உரை
 
43. தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான், என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை.

43

பதிவிறக்கம் செய்ய
உரை
 
44. பழி அஞ்சிப் பாத்து ஊண் உடைத்தாயின், வாழ்க்கை
வழி எஞ்சல், எஞ்ஞான்றும், இல்.

44

பதிவிறக்கம் செய்ய
உரை
 
45. அன்பும் அறனும் உடைத்துஆயின், இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

45

பதிவிறக்கம் செய்ய
உரை
 
46. அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின், புறத்து ஆற்றில்
போஒய்ப் பெறுவது எவன்?.

46

பதிவிறக்கம் செய்ய
உரை
 
47. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

47

பதிவிறக்கம் செய்ய
உரை
 
48. ஆற்றின் ஒழுக்கி, அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

48

பதிவிறக்கம் செய்ய
உரை
 
49. அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை; அஃதும்
பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று.

49

பதிவிறக்கம் செய்ய
உரை
 
50. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.

50

பதிவிறக்கம் செய்ய
உரை