தொடக்கம் | ||
வாழ்க்கைத்துணை நலம்
|
||
51. | மனைத் தக்க மாண்பு உடையள் ஆகி, தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத்துணை. |
51 பதிவிறக்கம் செய்யஉரை |
52. | மனை மாட்சி இல்லாள்கண் இல் ஆயின், வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும், இல். |
52 பதிவிறக்கம் செய்யஉரை |
53. | இல்லது என், இல்லவள் மாண்புஆனால்? உள்ளது என், இல்லவள் மாணாக்கடை?. |
53 பதிவிறக்கம் செய்யஉரை |
54. | பெண்ணின் பெருந்தக்க யா உள-கற்பு என்னும் திண்மை உண்டாகப்பெறின்?. |
54 பதிவிறக்கம் செய்யஉரை |
55. | தெய்வம் தொழாஅள், கொழுநன்-தொழுது எழுவாள், ‘பெய்’ என, பெய்யும் மழை. |
55 பதிவிறக்கம் செய்யஉரை |
56. | தற்காத்து, தற் கொண்டாற் பேணி, தகை சான்ற சொற்காத்து, சோர்வு இலாள்-பெண். |
56 பதிவிறக்கம் செய்யஉரை |
57. | சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்? மகளிர் நிறை காக்கும் காப்பே தலை. |
57 பதிவிறக்கம் செய்யஉரை |
58. | பெற்றாற் பெறின் பெறுவர், பெண்டிர், பெருஞ் சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. |
58 பதிவிறக்கம் செய்யஉரை |
59. | புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை-இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. |
59 பதிவிறக்கம் செய்யஉரை |
60. | 'மங்கலம்' என்ப, மனைமாட்சி; மற்று அதன் நன்கலம் நன் மக்கட் பேறு. |
60 பதிவிறக்கம் செய்யஉரை |