நடுவு நிலைமை
 
111. தகுதி என ஒன்றும் நன்றே-பகுதியான்
பாற்பட்டு ஒழுகப்பெறின்.

111

பதிவிறக்கம் செய்ய
உரை
 
112. செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி,
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.

112

பதிவிறக்கம் செய்ய
உரை
 
113. நன்றே தரினும், நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை
அன்றே ஒழியவிடல்!.

113

பதிவிறக்கம் செய்ய
உரை
 
114. தக்கார் தகவு இலர் என்பது அவர் அவர்
எச்சத்தால் காணப்படும்.

114

பதிவிறக்கம் செய்ய
உரை
 
115. கேடும் பெருக்கமும் இல் அல்ல; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.

115

பதிவிறக்கம் செய்ய
உரை
 
116. 'கெடுவல் யான்' என்பது அறிக-தன் நெஞ்சம்
நடுவு ஓரீஇ, அல்ல செயின்.

116

பதிவிறக்கம் செய்ய
உரை
 
117. கெடுவாக வையாது உலகம்-நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

117

பதிவிறக்கம் செய்ய
உரை
 
118. சமன் செய்து சீர் தூக்கும் கோல்போல் அமைந்து, ஒருபால்
கோடாமை-சான்றோர்க்கு அணி.

118

பதிவிறக்கம் செய்ய
உரை
 
119. சொற் கோட்டம் இல்லது, செப்பம்-ஒருதலையா
உட் கோட்டம் இன்மை பெறின்.

119

பதிவிறக்கம் செய்ய
உரை
 
120. வாணிகம் செய்வார்க்கு வாணிகம்-பேணிப்
பிறவும் தமபோல் செயின்.

120

பதிவிறக்கம் செய்ய
உரை