தொடக்கம் | ||
பிறன் இல் விழையாமை
|
||
141. | பிறன் பொருளாள்-பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து அறம், பொருள், கண்டார்கண் இல். |
141 பதிவிறக்கம் செய்யஉரை |
142. | அறன்கடை நின்றாருள் எல்லாம், பிறன்கடை நின்றாரின், பேதையார் இல். |
142 பதிவிறக்கம் செய்யஉரை |
143. | விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற-தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார். |
143 பதிவிறக்கம் செய்யஉரை |
144. | எனைத் துணையர் ஆயினும் என்னாம்-தினைத் துணையும் தேரான், பிறன் இல் புகல?. |
144 பதிவிறக்கம் செய்யஉரை |
145. | 'எளிது' என இல் இறப்பான் எய்தும்-எஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. |
145 பதிவிறக்கம் செய்யஉரை |
146. | பகை, பாவம், அச்சம், பழி என நான்கும் இகவா ஆம்-இல் இறப்பான்கண். |
146 பதிவிறக்கம் செய்யஉரை |
147. | அறன் இயலான் இல்வாழ்வான் என்பான்-பிறன் இயலாள் பெண்மை நயவாதவன். |
147 பதிவிறக்கம் செய்யஉரை |
148. | பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை, சான்றோர்க்கு அறன் ஒன்றோ?ஆன்ற ஒழுக்கு. |
148 பதிவிறக்கம் செய்யஉரை |
149. | 'நலக்கு உரியார் யார்?' எனின், நாம நீர் வைப்பில் பிறற்கு உரியாள் தோள் தோயாதார். |
149 பதிவிறக்கம் செய்யஉரை |
150. | அறன் வரையான், அல்ல செயினும், பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று. |
150 பதிவிறக்கம் செய்யஉரை |