தொடக்கம் | ||
அழுக்காறாமை
|
||
161. | ஒழுக்கு ஆறாக் கொள்க-ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. |
161 பதிவிறக்கம் செய்யஉரை |
162. | விழுப் பேற்றின் அஃது ஒப்பது இல்லை-யார்மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின். |
162 பதிவிறக்கம் செய்யஉரை |
163. | அறன், ஆக்கம், வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம் பேணாது அழுக்கறுப்பான். |
163 பதிவிறக்கம் செய்யஉரை |
164. | அழுக்காற்றின் அல்லவை செய்யார்-இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து. |
164 பதிவிறக்கம் செய்யஉரை |
165. | அழுக்காறு உடையார்க்கு அது சாலும்- ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது. |
165 பதிவிறக்கம் செய்யஉரை |
166. | கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும். |
166 பதிவிறக்கம் செய்யஉரை |
167. | அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். |
167 பதிவிறக்கம் செய்யஉரை |
168. | அழுக்காறு என ஒரு பாவி திருச் செற்று, தீயுழி உய்த்துவிடும். |
168 பதிவிறக்கம் செய்யஉரை |
169. | அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும், நினைக்கப்படும். |
169 பதிவிறக்கம் செய்யஉரை |
170. | அழுக்கற்று அகன்றாரும் இல்லை; அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல். |
170 பதிவிறக்கம் செய்யஉரை |