புறம் கூறாமை
 
181. அறம் கூறான், அல்ல செயினும், ஒருவன்
புறம் கூறான் என்றல் இனிது.

181

பதிவிறக்கம் செய்ய
உரை
 
182. அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே-
புறன் அழீஇப் பொய்த்து நகை.

182

பதிவிறக்கம் செய்ய
உரை
 
183. புறம் கூறி, பொய்த்து, உயிர் வாழ்தலின், சாதல்
அறம் கூறும் ஆக்கம் தரும்.

183

பதிவிறக்கம் செய்ய
உரை
 
184. கண் நின்று, கண் அறச் சொல்லினும், சொல்லற்க-
முன் இன்று பின் நோக்காச் சொல்.

184

பதிவிறக்கம் செய்ய
உரை
 
185. அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும்
புன்மையால் காணப்படும்.

185

பதிவிறக்கம் செய்ய
உரை
 
186. பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும்
திறன் தெரிந்து கூறப்படும்.

186

பதிவிறக்கம் செய்ய
உரை
 
187. பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர்-நகச் சொல்லி
நட்பு ஆடல் தேற்றாதவர்.

187

பதிவிறக்கம் செய்ய
உரை
 
188. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்,
என்னைகொல், ஏதிலார்மாட்டு?.

188

பதிவிறக்கம் செய்ய
உரை
 
189. அறன் நோக்கி ஆற்றும் கொல் வையம்-புறன் நோக்கிப்
புன் சொல் உரைப்பான் பொறை.

189

பதிவிறக்கம் செய்ய
உரை
 
190. ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின்,
தீது உண்டோ, மன்னும் உயிரக்கு?.

190

பதிவிறக்கம் செய்ய
உரை