தொடக்கம் | ||
பயன் இல சொல்லாமை
|
||
191. | பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் எல்லாரும் எள்ளப்படும். |
191 பதிவிறக்கம் செய்யஉரை |
192. | பயன் இல பல்லார்முன் சொல்லல், நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது. |
192 பதிவிறக்கம் செய்யஉரை |
193. | நயன் இலன் என்பது சொல்லும்-பயன் இல பாரித்து உரைக்கும் உரை. |
193 பதிவிறக்கம் செய்யஉரை |
194. | நயன் சாரா நன்மையின் நீக்கும்-பயன் சாராப் பண்பு இல் சொல் பல்லாரகத்து. |
194 பதிவிறக்கம் செய்யஉரை |
195. | சீர்மை சிறப்பொடு நீங்கும்-பயன் இல நீர்மை உடையார் சொலின். |
195 பதிவிறக்கம் செய்யஉரை |
196. | பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்! மக்கட் பதடி எனல்!. |
196 பதிவிறக்கம் செய்யஉரை |
197. | நயன் இல சொல்லினும் சொல்லுக! சான்றோர் பயன் இல சொல்லாமை நன்று. |
197 பதிவிறக்கம் செய்யஉரை |
198. | அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார்- பெரும் பயன் இல்லாத சொல். |
198 பதிவிறக்கம் செய்யஉரை |
199. | பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார்-மருள் தீர்ந்த மாசு அறு காட்சியவர். |
199 பதிவிறக்கம் செய்யஉரை |
200. | சொல்லுக, சொல்லில் பயன் உடைய! சொல்லற்க, சொல்லில் பயன் இலாச் சொல்!. |
200 பதிவிறக்கம் செய்யஉரை |