தீவினை அச்சம்
 
201. தீவினையார் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர்-
தீவினை என்னும் செருக்கு.

201

பதிவிறக்கம் செய்ய
உரை
 
202. தீயவை தீய பயத்தலான், தீயவை
தீயினும் அஞ்சப்படும்.

202

பதிவிறக்கம் செய்ய
உரை
 
203. அறிவினுள் எல்லாம் தலை என்ப-தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.

203

பதிவிறக்கம் செய்ய
உரை
 
204. மறந்தும் பிறன் கேடு சூழற்க! சூழின்,
அறம் சூழும், சூழ்ந்தவன் கேடு.

204

பதிவிறக்கம் செய்ய
உரை
 
205. 'இலன்' என்று தீயவை செய்யற்க! செய்யின்,
இலன் ஆகும், மற்றும் பெயர்த்து.

205

பதிவிறக்கம் செய்ய
உரை
 
206. தீப் பால தான் பிறர்கண் செய்யற்க-நோய்ப் பால
தன்னை அடல் வேண்டாதான்!.

206

பதிவிறக்கம் செய்ய
உரை
 
207. எனைப் பகை உற்றாரும் உய்வர்; வினைப் பகை
வீயாது, பின் சென்று, அடும்.

207

பதிவிறக்கம் செய்ய
உரை
 
208. தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்தற்று.

208

பதிவிறக்கம் செய்ய
உரை
 
209. தன்னைத் தான் காதலன் ஆயின், எனைத்து ஒன்றும்
துன்னற்க, தீவினைப் பால்!.

209

பதிவிறக்கம் செய்ய
உரை
 
210. அருங் கேடன் என்பது அறிக-மருங்கு ஓடித்
தீவினை செய்யான் எனின்?.

210

பதிவிறக்கம் செய்ய
உரை