ஒப்புரவு அறிதல்
 
211. கைம்மாறு வேண்டா கடப்பாடு; மாரிமாட்டு
என் ஆற்றும் கொல்லோ, உலகு?.

211

பதிவிறக்கம் செய்ய
உரை
 
212. தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற்பொருட்டு.

212

பதிவிறக்கம் செய்ய
உரை
 
213. புத்தேள் உலகத்தும், ஈண்டும், பெறல் அரிதே-
ஒப்புரவின் நல்ல பிற.

213

பதிவிறக்கம் செய்ய
உரை
 
214. ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்; மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும்.

214

பதிவிறக்கம் செய்ய
உரை
 
215. ஊருணி நீர் நிறைந்தற்றே-உலகு அவாம்
பேர் அறிவாளன் திரு.

215

பதிவிறக்கம் செய்ய
உரை
 
216. பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்-செல்வம்
நயன் உடையான்கண் படின்.

216

பதிவிறக்கம் செய்ய
உரை
 
217. மருந்து ஆகித் தப்பா மரத்தற்றால்-செல்வம்
பெருந்தகையான்கண் படின்.

217

பதிவிறக்கம் செய்ய
உரை
 
218. இடன் இல் பருவத்தும், ஒப்புரவிற்கு ஒல்கார்-
கடன் அறி காட்சியவர்.

218

பதிவிறக்கம் செய்ய
உரை
 
219. நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும் நீர
செய்யாது அமைகலா ஆறு.

219

பதிவிறக்கம் செய்ய
உரை
 
220. 'ஒப்புரவினால் வரும், கேடு' எனின், அஃது ஒருவன்
விற்றுக் கோள் தக்கது உடைத்து.

220

பதிவிறக்கம் செய்ய
உரை