தொடக்கம் | ||
ஈகை
|
||
221. | வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை; மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து. |
221 பதிவிறக்கம் செய்யஉரை |
222. | 'நல்லாறு' எனினும், கொளல் தீது; ‘மேல் உலகம் இல்’ எனினும், ஈதலே நன்று. |
222 பதிவிறக்கம் செய்யஉரை |
223. | 'இலன்' என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன் உடையான்கண்ணே உள. |
223 பதிவிறக்கம் செய்யஉரை |
224. | இன்னாது, இரக்கப்படுதல்-இரந்தவர் இன் முகம் காணும் அளவு. |
224 பதிவிறக்கம் செய்யஉரை |
225. | ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்; அப் பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். |
225 பதிவிறக்கம் செய்யஉரை |
226. | அற்றார் அழி பசி தீர்த்தல்! அஃது ஒருவன் பெற்றான் பொருள் வைப்பு உழி. |
226 பதிவிறக்கம் செய்யஉரை |
227. | பாத்து ஊண் மரீஇயவனைப் பசி என்னும் தீப் பிணி தீண்டல் அரிது. |
227 பதிவிறக்கம் செய்யஉரை |
228. | ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல்-தாம் உடைமை வைத்து இழக்கும் வன் கணவர்?. |
228 பதிவிறக்கம் செய்யஉரை |
229. | இரத்தலின் இன்னாது மன்ற-நிரப்பிய தாமே தமியர் உணல். |
229 பதிவிறக்கம் செய்யஉரை |
230. | சாதலின் இன்னாதது இல்லை; இனிது, அதூஉம் ஈதல் இயையாக்கடை. |
230 பதிவிறக்கம் செய்யஉரை |