தொடக்கம் | ||
அருள் உடைமை
|
||
241. | அருட் செல்வம், செல்வத்துள் செல்வம்; பொருட் செல்வம் பூரியார்கண்ணும் உள. |
241 பதிவிறக்கம் செய்யஉரை |
242. | நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க! பல் ஆற்றான் தேரினும் அஃதே துணை. |
242 பதிவிறக்கம் செய்யஉரை |
243. | அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை-இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல். |
243 பதிவிறக்கம் செய்யஉரை |
244. | 'மன் உயிர் ஓம்பி, அருள் ஆள்வாற்கு இல்' என்ப- ‘தன் உயிர் அஞ்சும் வினை'. |
244 பதிவிறக்கம் செய்யஉரை |
245. | அல்லல், அருள் ஆள்வார்க்கு இல்லை; வளி வழங்கும் மல்லல் மா ஞாலம் கரி. |
245 பதிவிறக்கம் செய்யஉரை |
246. | 'பொருள் நீங்கிப் பொச்சாந்தார்' என்பர்-'அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார்'. |
246 பதிவிறக்கம் செய்யஉரை |
247. | அருள் இல்லார்க்கு அவ் உலகம் இல்லை-பொருள் இல்லார்க்கு இவ் உலகம் இல்லாகியாங்கு. |
247 பதிவிறக்கம் செய்யஉரை |
248. | பொருள் அற்றார் பூப்பர் ஒருகால்; அருள் அற்றார் அற்றார்; மற்று ஆதல் அரிது. |
248 பதிவிறக்கம் செய்யஉரை |
249. | தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்-தேரின், அருளாதான் செய்யும் அறம். |
249 பதிவிறக்கம் செய்யஉரை |
250. | வலியார் முன் தன்னை நினைக்க-தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து. |
250 பதிவிறக்கம் செய்யஉரை |