புலால் மறுத்தல்
 
251. தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?.

251

பதிவிறக்கம் செய்ய
உரை
 
252. பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை; அருள் ஆட்சி
ஆங்கு இல்லை, ஊன் தின்பவர்க்கு.

252

பதிவிறக்கம் செய்ய
உரை
 
253. படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது-ஒன்றன்
உடல் சுவை உண்டார் மனம்.

253

பதிவிறக்கம் செய்ய
உரை
 
254. 'அருள்', அல்லது, யாது?' எனின்,-கொல்லாமை, கோறல்:
பொருள் அல்லது, அவ் ஊன் தினல்.

254

பதிவிறக்கம் செய்ய
உரை
 
255. உண்ணாமை உள்ளது உயிர்நிலை; ஊன் உண்ண,
அண்ணாத்தல் செய்யாது, அளறு.

255

பதிவிறக்கம் செய்ய
உரை
 
256. தினற்பொருட்டால் கொல்லாது உலகு எனின், யாரும்
விலைப் பொருட்டால் ஊன் தருவார் இல்.

256

பதிவிறக்கம் செய்ய
உரை
 
257. உண்ணாமை வேண்டும், புலாஅல்-பிறிது ஒன்றன்
புண்; அது உணர்வார்ப் பெறின்.

257

பதிவிறக்கம் செய்ய
உரை
 
258. செயிரின் தலைப் பிரிந்த காட்சியார் உண்ணார்,
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

258

பதிவிறக்கம் செய்ய
உரை
 
259. அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின், ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று.

259

பதிவிறக்கம் செய்ய
உரை
 
260. கொல்லான், புலாலை மறுத்தானைக் கைகூப்பி,
எல்லா உயிரும் தொழும்.

260

பதிவிறக்கம் செய்ய
உரை