தொடக்கம் | ||
தவம்
|
||
261. | உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை, அற்றே-தவத்திற்கு உரு. |
261 பதிவிறக்கம் செய்யஉரை |
262. | தவமும் தவம் உடையார்க்கு ஆகும்; அவம், அதனை அஃது இலார் மேற்கொள்வது. |
262 பதிவிறக்கம் செய்யஉரை |
263. | துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி, மறந்தார்கொல்- மற்றையவர்கள், தவம்!. |
263 பதிவிறக்கம் செய்யஉரை |
264. | ஒன்னார்த் தெறலும், உவந்தாரை ஆக்கலும், எண்ணின், தவத்தான் வரும். |
264 பதிவிறக்கம் செய்யஉரை |
265. | வேண்டிய வேண்டியாங்கு எய்தலான், செய் தவம் ஈண்டு முயலப்படும். |
265 பதிவிறக்கம் செய்யஉரை |
266. | தவம் செய்வார் தம் கருமம் செய்வார்; மற்று அல்லார் அவம் செய்வார், ஆசையுள் பட்டு. |
266 பதிவிறக்கம் செய்யஉரை |
267. | சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும்-துன்பம் சுடச்சுட நோற்கிற்பவர்க்கு. |
267 பதிவிறக்கம் செய்யஉரை |
268. | தன் உயிர் தான் அறப் பெற்றானை ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும். |
268 பதிவிறக்கம் செய்யஉரை |
269. | கூற்றம் குதித்தலும் கைகூடும்-நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு. |
269 பதிவிறக்கம் செய்யஉரை |
270. | இலர் பலர் ஆகிய காரணம்-நோற்பார் சிலர்; பலர் நோலாதவர். |
270 பதிவிறக்கம் செய்யஉரை |