கூடா ஒழுக்கம்
 
271. வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

271

பதிவிறக்கம் செய்ய
உரை
 
272. வான் உயர் தோற்றம் எவன் செய்யும்-தன் நெஞ்சம்
தான் அறி குற்றபடின்?.

272

பதிவிறக்கம் செய்ய
உரை
 
273. வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று.

273

பதிவிறக்கம் செய்ய
உரை
 
274. தவம் மறைந்து, அல்லவை செய்தல்-புதல்மறைந்து
வேட்டுவன் புள் சிமிழ்த்தற்று.

274

பதிவிறக்கம் செய்ய
உரை
 
275. 'பற்று அற்றேம்' என்பார் படிற்று ஒழுக்கம். ‘எற்று! எற்று!' என்று
ஏதம் பலவும் தரும்.

275

பதிவிறக்கம் செய்ய
உரை
 
276. நெஞ்சின் துறவார், துறந்தார்போல் வஞ்சித்து,
வாழ்வாரின் வன்கணார் இல்.

276

பதிவிறக்கம் செய்ய
உரை
 
277. புறம் குன்றி கண்டனையரேனும், அகம் குன்றி
மூக்கில் கரியார் உடைத்து.

277

பதிவிறக்கம் செய்ய
உரை
 
278. மனத்தது மாசு ஆக, மாண்டார் நீர் ஆடி,
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர்.

278

பதிவிறக்கம் செய்ய
உரை
 
279. கணை கொடிது; யாழ் கோடு செவ்விது; ஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்.

279

பதிவிறக்கம் செய்ய
உரை
 
280. மழித்தலும் நீட்டலும் வேண்டா- உலகம்
பழித்தது ஒழித்துவிடின்.

280

பதிவிறக்கம் செய்ய
உரை