கள்ளாமை
 
281. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்
கள்ளாமை காக்க, தன் நெஞ்சு!.

281

பதிவிறக்கம் செய்ய
உரை
 
282. உள்ளத்தால் உள்ளலும் தீதே; ‘பிறன் பொருளைக்
கள்ளத்தால் கள்வேம்’ எனல்!.

282

பதிவிறக்கம் செய்ய
உரை
 
283. களவினால் ஆகிய ஆக்கம், அளவு இறந்து,
ஆவது போல, கெடும்.

283

பதிவிறக்கம் செய்ய
உரை
 
284. களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

284

பதிவிறக்கம் செய்ய
உரை
 
285. அருள் கருதி அன்புடையர் ஆதல் பொருள் கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

285

பதிவிறக்கம் செய்ய
உரை
 
286. அளவின்கண் நின்று ஒழுகலாற்றார்-களவின்கண்
கன்றிய காதலவர்.

286

பதிவிறக்கம் செய்ய
உரை
 
287. களவு என்னும் கார் அறிவு ஆண்மை அளவு என்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.

287

பதிவிறக்கம் செய்ய
உரை
 
288. அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம்போல, நிற்கும்,
களவு அறிந்தார் நெஞ்சில் கரவு.

288

பதிவிறக்கம் செய்ய
உரை
 
289. அளவு அல்ல செய்து, ஆங்கே வீவர்-களவு அல்ல
மற்றைய தேற்றாதவர்.

289

பதிவிறக்கம் செய்ய
உரை
 
290. கள்வார்க்குத் தள்ளும், உயிர்நிலை; கள்ளார்க்குத்
தள்ளாது, புத்தேள் உலகு.

290

பதிவிறக்கம் செய்ய
உரை