வாய்மை
 
291. 'வாய்மை எனப்படுவது யாது?' எனின், யாது ஒன்றும்
தீமை இலாத சொலல்.

291

பதிவிறக்கம் செய்ய
உரை
 
292. பொய்ம்மையும் வாய்மை இடத்த-புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

292

பதிவிறக்கம் செய்ய
உரை
 
293. தன் நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின்,
தன் நெஞ்சே தன்னைச் சுடும்.

293

பதிவிறக்கம் செய்ய
உரை
 
294. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின், உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

294

பதிவிறக்கம் செய்ய
உரை
 
295. மனத்தொடு வாய்மை மொழியின், தவத்தொடு
தானம் செய்வாரின் தலை.

295

பதிவிறக்கம் செய்ய
உரை
 
296. பொய்யாமை அன்ன புகழ் இல்லை; எய்யாமை,
எல்லா அறமும் தரும்.

296

பதிவிறக்கம் செய்ய
உரை
 
297. பொய்யாமை பொய்யாமை ஆற்றின், அறம் பிற
செய்யாமை செய்யாமை நன்று.

297

பதிவிறக்கம் செய்ய
உரை
 
298. புறம் தூய்மை நீரால் அமையும்;- அகம் தூய்மை
வாய்மையால் காணப்படும்.

298

பதிவிறக்கம் செய்ய
உரை
 
299. எல்லா விளக்கும் விளக்கு அல்ல; சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

299

பதிவிறக்கம் செய்ய
உரை
 
300. யாம் மெய்யாக் கண்டவற்றுள், இல்லை-எனைத்து ஒன்றும்
வாய்மையின் நல்ல பிற.

300

பதிவிறக்கம் செய்ய
உரை