வெகுளாமை
 
301. செல் இடத்துக் காப்பான் சினம் காப்பான்; அல் இடத்து,
காக்கின் என்? காவாக்கால் என்?.

301

பதிவிறக்கம் செய்ய
உரை
 
302. செல்லா இடத்துச் சினம் தீது; செல் இடத்தும்,
இல், அதனின் தீய பிற.

302

பதிவிறக்கம் செய்ய
உரை
 
303. மறத்தல், வெகுளியை யார்மாட்டும்-தீய
பிறத்தல் அதனான் வரும்.

303

பதிவிறக்கம் செய்ய
உரை
 
304. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ, பிற?.

304

பதிவிறக்கம் செய்ய
உரை
 
305. தன்னைத் தான் காக்கின், சினம் காக்க! காவாக்கால்,
தன்னையே கொல்லும், சினம்.

305

பதிவிறக்கம் செய்ய
உரை
 
306. சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும்.

306

பதிவிறக்கம் செய்ய
உரை
 
307. சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்து அறைந்தான் கை பிழையாதற்று.

307

பதிவிறக்கம் செய்ய
உரை
 
308. இணர் எரி தோய்வன்ன இன்னா செயினும்,
புணரின் வெகுளாமை நன்று.

308

பதிவிறக்கம் செய்ய
உரை
 
309. உள்ளிய எல்லாம் உடன் எய்தும்-உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

309

பதிவிறக்கம் செய்ய
உரை
 
310. இறந்தார் இறந்தார் அனையர்; சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

310

பதிவிறக்கம் செய்ய
உரை