இன்னா செய்யாமை
 
311. சிறப்பு ஈனும் செல்வம் பெறினும், பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசு அற்றார் கோள்.

311

பதிவிறக்கம் செய்ய
உரை
 
312. கறுத்து இன்னா செய்த அக்கண்ணும், மறுத்து இன்னா
செய்யாமை மாசு அற்றார் கோள்.

312

பதிவிறக்கம் செய்ய
உரை
 
313. செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்,
உய்யா விழுமம் தரும்.

313

பதிவிறக்கம் செய்ய
உரை
 
314. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நல் நயம் செய்து, விடல்.

314

பதிவிறக்கம் செய்ய
உரை
 
315. அறிவினான் ஆகுவது உண்டோ-பிறிதின் நோய்
தம் நோய்போல் போற்றாக்கடை?.

315

பதிவிறக்கம் செய்ய
உரை
 
316. இன்னா எனத் தான் உணர்ந்தவை, துன்னாமை
வேண்டும், பிறன்கண் செயல்.

316

பதிவிறக்கம் செய்ய
உரை
 
317. எனைத்தானும், எஞ்ஞான்றும், யார்க்கும், மனத்தான் ஆம்
மாணா செய்யாமை தலை.

317

பதிவிறக்கம் செய்ய
உரை
 
318. தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான், என்கொலோ,
மன் உயிர்க்கு இன்னா செயல்?.

318

பதிவிறக்கம் செய்ய
உரை
 
319. பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்.

319

பதிவிறக்கம் செய்ய
உரை
 
320. நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்; நோய் செய்யார்,
நோய் இன்மை வேண்டுபவர்.

320

பதிவிறக்கம் செய்ய
உரை