கொல்லாமை
 
321. 'அறவினை யாது?' எனின், கொல்லாமை; கோறல்
பிற வினை எல்லாம் தரும்.

321

பதிவிறக்கம் செய்ய
உரை
 
322. பகுத்து உண்டு, பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

322

பதிவிறக்கம் செய்ய
உரை
 
323. ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்று அதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

323

பதிவிறக்கம் செய்ய
உரை
 
324. 'நல்லாறு எனப்படுவது யாது?' எனின், யாது ஒன்றும்
கொல்லாமை சூழும் நெறி.

324

பதிவிறக்கம் செய்ய
உரை
 
325. நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம், கொலை அஞ்சிக்
கொல்லாமை சூழ்வான், தலை.

325

பதிவிறக்கம் செய்ய
உரை
 
326. கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது, உயிர் உண்ணும் கூற்று.

326

பதிவிறக்கம் செய்ய
உரை
 
327. தன் உயிர் நீப்பினும் செய்யற்க-தான் பிறிது
இன் உயிர் நீக்கும் வினை.

327

பதிவிறக்கம் செய்ய
உரை
 
328. நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும், சான்றோர்க்குக்
கொன்று ஆகும் ஆக்கம் கடை.

328

பதிவிறக்கம் செய்ய
உரை
 
329. கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர்,
புன்மை தெரிவார் அகத்து.

329

பதிவிறக்கம் செய்ய
உரை
 
330. 'உயிர் உடம்பின் நீக்கியார்' என்ப-'செயிர் உடம்பின்
செல்லாத் தீ வாழ்க்கையவர்'.

330

பதிவிறக்கம் செய்ய
உரை