மெய் உணர்தல்
 
351. பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்
மருளான் ஆம், மாணாப் பிறப்பு.

351

பதிவிறக்கம் செய்ய
உரை
 
352. இருள் நீங்கி இன்பம் பயக்கும்-மருள் நீங்கி
மாசு அறு காட்சியவர்க்கு.

352

பதிவிறக்கம் செய்ய
உரை
 
353. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து.

353

பதிவிறக்கம் செய்ய
உரை
 
354. ஐஉணர்வு எய்தியக் கண்ணும் பயம் இன்றே-
மெய் உணர்வு இல்லாதவர்க்கு.

354

பதிவிறக்கம் செய்ய
உரை
 
355. எப் பொருள் எத் தன்மைத்துஆயினும், அப் பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

355

பதிவிறக்கம் செய்ய
உரை
 
356. கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்,
மற்று ஈண்டு வாரா நெறி.

356

பதிவிறக்கம் செய்ய
உரை
 
357. ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையா,
பேர்த்து உள்ளவேண்டா பிறப்பு.

357

பதிவிறக்கம் செய்ய
உரை
 
358. பிறப்பு என்னும் பேதைமை நீங்க, சிறப்பு என்னும்
செம்பொருள் காண்பது அறிவு.

358

பதிவிறக்கம் செய்ய
உரை
 
359. சார்பு உணர்ந்து, சார்பு கெட ஒழுகின், மற்று அழித்துச்
சார்தரா, சார்தரும் நோய்.

359

பதிவிறக்கம் செய்ய
உரை
 
360. காமம், வெகுளி, மயக்கம், இவை மூன்றன்
நாமம் கெட, கெடும் நோய்.

360

பதிவிறக்கம் செய்ய
உரை