ஊழ்
 
371. ஆகு ஊழால் தோன்றும், அசைவு இன்மை; கைப்பொருள்
போகு ஊழால் தோன்றும், மடி.

371

பதிவிறக்கம் செய்ய
உரை
 
372. பேதைப் படுக்கும், இழவு ஊழ்; அறிவு அகற்றும்,
ஆகல் ஊழ் உற்றக்கடை.

372

பதிவிறக்கம் செய்ய
உரை
 
373. நுண்ணிய நூல் பல கற்பினும், மற்றும் தன்
உண்மை அறிவே மிகும்.

373

பதிவிறக்கம் செய்ய
உரை
 
374. இரு வேறு, உலகத்து இயற்கை; திரு வேறு;
தெள்ளியர் ஆதலும் வேறு.

374

பதிவிறக்கம் செய்ய
உரை
 
375. நல்லவை எல்லாஅம் தீய ஆம்; தீயவும்
நல்ல ஆம்;-செல்வம் செயற்கு.

375

பதிவிறக்கம் செய்ய
உரை
 
376. பரியினும் ஆகாவாம், பால் அல்ல; உய்த்துச்
சொரியினும் போகா, தம.

376

பதிவிறக்கம் செய்ய
உரை
 
377. வகுத்தான் வகுத்த வகை அல்லால், கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

377

பதிவிறக்கம் செய்ய
உரை
 
378. துறப்பார்மன், துப்புரவு இல்லார்-உறற்பால
ஊட்டா கழியும் எனின்.

378

பதிவிறக்கம் செய்ய
உரை
 
379. நன்று ஆம் கால் நல்லவாக் காண்பவர், அன்று ஆம் கால்
அல்லற்படுவது எவன்.

379

பதிவிறக்கம் செய்ய
உரை
 
380. ஊழின் பெருவலி யா உள-மற்று ஒன்று
சூழினும், தான் முந்துறும்.

380

பதிவிறக்கம் செய்ய
உரை