இறைமாட்சி
 
381. படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

381

பதிவிறக்கம் செய்ய
உரை
 
382. அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இந் நான்கும்
எஞ்சாமை-வேந்தற்கு இயல்பு.

382

பதிவிறக்கம் செய்ய
உரை
 
383. தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம் மூன்றும்
நீங்கா-நிலன் ஆள்பவற்கு.

383

பதிவிறக்கம் செய்ய
உரை
 
384. அறன் இழுக்காது, அல்லவை நீக்கி, மறன் இழுக்கா
மானம் உடையது-அரசு.

384

பதிவிறக்கம் செய்ய
உரை
 
385. இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த
வகுத்தலும், வல்லது-அரசு.

385

பதிவிறக்கம் செய்ய
உரை
 
386. காட்சிக்கு எளியன், கடுஞ் சொல்லன் அல்லனேல்,
மீக்கூறும், மன்னன் நிலம்.

386

பதிவிறக்கம் செய்ய
உரை
 
387. இன் சொலால் ஈத்து, அளிக்க வல்லாற்குத் தன் சொலால்
தான் கண்டனைத்து, இவ் உலகு.

387

பதிவிறக்கம் செய்ய
உரை
 
388. முறை செய்து காப்பாற்றும் மன்னவன், ‘மக்கட்கு
இறை’ என்று வைக்கப்படும்.

388

பதிவிறக்கம் செய்ய
உரை
 
389. செவி கைப்பச் சொற் பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும், உலகு.

389

பதிவிறக்கம் செய்ய
உரை
 
390. கொடை, அளி, செங்கோல், குடி-ஓம்பல், நான்கும்
உடையான் ஆம், வேந்தர்க்கு ஒளி.

390

பதிவிறக்கம் செய்ய
உரை