கல்வி
 
391. கற்க, கசடு அற, கற்பவை! கற்றபின்,
நிற்க, அதற்குத் தக!.

391

பதிவிறக்கம் செய்ய
உரை
 
392. 'எண்' என்ப, ஏனை ‘எழுத்து’ என்ப, இவ் இரண்டும்
‘கண்’ என்ப, வாழும் உயிர்க்கு.

392

பதிவிறக்கம் செய்ய
உரை
 
393. கண் உடையர் என்பவர் கற்றோர்; முகத்து இரண்டு
புண் உடையர், கல்லாதவர்.

393

பதிவிறக்கம் செய்ய
உரை
 
394. உவப்பத் தலைக்கூடி, உள்ளப் பிரிதல்
அனைத்தே-புலவர் தொழில்.

394

பதிவிறக்கம் செய்ய
உரை
 
395. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்;
கடையரே, கல்லாதவர்.

395

பதிவிறக்கம் செய்ய
உரை
 
396. தொட்டனைத்து ஊறும், மணற் கேணி;-மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும், அறிவு.

396

பதிவிறக்கம் செய்ய
உரை
 
397. யாதானும் நாடு ஆமால்; ஊர் ஆமால்; என், ஒருவன்
சாம் துணையும் கல்லாதவாறு?.

397

பதிவிறக்கம் செய்ய
உரை
 
398. ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

398

பதிவிறக்கம் செய்ய
உரை
 
399. தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு,
காமுறுவர், கற்று அறிந்தார்.

399

பதிவிறக்கம் செய்ய
உரை
 
400. கேடு இல் விழுச் செல்வம் கல்வி; ஒருவற்கு
மாடு அல்ல, மற்றையவை.

400

பதிவிறக்கம் செய்ய
உரை