கல்லாமை
 
401. அரங்கு இன்றி வட்டு ஆடியற்றே-நிரம்பிய
நூல் இன்றிக் கோட்டி கொளல்.

401

பதிவிறக்கம் செய்ய
உரை
 
402. கல்லாதான் சொல் காமுறுதல், முலை இரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்றற்று.

402

பதிவிறக்கம் செய்ய
உரை
 
403. கல்லாதவரும் நனி நல்லர்-கற்றார்முன்
சொல்லாது இருக்கப்பெறின்.

403

பதிவிறக்கம் செய்ய
உரை
 
404. கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும்,
கொள்ளார், அறிவு உடையார்.

404

பதிவிறக்கம் செய்ய
உரை
 
405. கல்லா ஒருவன் தகைமை, தலைப்பெய்து
சொல்லாட, சோர்வுபடும்.

405

பதிவிறக்கம் செய்ய
உரை
 
406. உளர் என்னும் மாத்திரையர் அல்லால், பயவாக்
களர் அனையர்-கல்லாதவர்.

406

பதிவிறக்கம் செய்ய
உரை
 
407. நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம்
மண் மாண் புனை பாவை அற்று.

407

பதிவிறக்கம் செய்ய
உரை
 
408. நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே-
கல்லார்கண் பட்ட திரு.

408

பதிவிறக்கம் செய்ய
உரை
 
409. மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார், கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்து இலர் பாடு.

409

பதிவிறக்கம் செய்ய
உரை
 
410. விலங்கொடு மக்கள் அனையர்-இலங்கு நூல்
கற்றாரொடு ஏனையவர்.

410

பதிவிறக்கம் செய்ய
உரை