கேள்வி
 
411. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச் செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.

411

பதிவிறக்கம் செய்ய
உரை
 
412. செவிக்கு உணவு இல்லாத போழ்து, சிறிது,
வயிற்றுக்கும் ஈயப்படும்.

412

பதிவிறக்கம் செய்ய
உரை
 
413. செவியுணவின் கேள்வி உடையார், அவியுணவின்
ஆன்றாரொடு ஒப்பர், நிலத்து.

413

பதிவிறக்கம் செய்ய
உரை
 
414. கற்றிலன் ஆயினும் கேட்க; அஃது ஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை.

414

பதிவிறக்கம் செய்ய
உரை
 
415. இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே-
ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல்.

415

பதிவிறக்கம் செய்ய
உரை
 
416. எனைத்தானும் நல்லவை கேட்க! அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

416

பதிவிறக்கம் செய்ய
உரை
 
417. பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார்-இழைத்து உணர்ந்து
ஈண்டிய கேள்வியவர்.

417

பதிவிறக்கம் செய்ய
உரை
 
418. கேட்பினும் கேளாத் தகையவே-கேள்வியால்
தோட்கப் படாத செவி.

418

பதிவிறக்கம் செய்ய
உரை
 
419. நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது.

419

பதிவிறக்கம் செய்ய
உரை
 
420. செவியின் சுவை உணரா, வாய் உணர்வின், மாக்கள்
அவியினும் வாழினும் என்.

420

பதிவிறக்கம் செய்ய
உரை