| தொடக்கம் | ||
| அறிவுடைமை
|
||
| 421. | அறிவு, அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும் உள் அழிக்கல் ஆகா அரண். |
421 பதிவிறக்கம் செய்யஉரை |
| 422. | சென்ற இடத்தால் செலவிடா, தீது ஒரீஇ, நன்றின் பால் உய்ப்பது-அறிவு. |
422 பதிவிறக்கம் செய்யஉரை |
| 423. | எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப் பொருள் மெய்ப் பொருள் காண்பது-அறிவு. |
423 பதிவிறக்கம் செய்யஉரை |
| 424. | எண் பொருளவாகச் செலச் சொல்லி, தான் பிறர்வாய் நுண் பொருள் காண்பது-அறிவு. |
424 பதிவிறக்கம் செய்யஉரை |
| 425. | உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும் கூம்பலும் இல்லது-அறிவு. |
425 பதிவிறக்கம் செய்யஉரை |
| 426. | எவ்வது உறைவது உலகம், உலகத்தொடு அவ்வது உறைவது-அறிவு. |
426 பதிவிறக்கம் செய்யஉரை |
| 427. | அறிவு உடையார் ஆவது அறிவார்; அறிவு இலார் அஃது அறிகல்லாதவர். |
427 பதிவிறக்கம் செய்யஉரை |
| 428. | அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது அஞ்சல், அறிவார் தொழில். |
428 பதிவிறக்கம் செய்யஉரை |
| 429. | எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை- அதிர வருவதோர் நோய். |
429 பதிவிறக்கம் செய்யஉரை |
| 430. | அறிவு உடையார் எல்லாம் உடையார்; அறிவு இலார் என் உடையரேனும் இலர். |
430 பதிவிறக்கம் செய்யஉரை |