பெரியாரைத் துணைக்கோடல்
 
441. அறன் அறிந்து மூத்த அறிவு உடையார் கேண்மை
திறன் அறிந்து, தேர்ந்து, கொளல்.

441

பதிவிறக்கம் செய்ய
உரை
 
442. உற்ற நோய் நீக்கி, உறாஅமை முன் காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

442

பதிவிறக்கம் செய்ய
உரை
 
443. அரியவற்றுள் எல்லாம் அரிதே-பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

443

பதிவிறக்கம் செய்ய
உரை
 
444. தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்,
வன்மையுள் எல்லாம் தலை.

444

பதிவிறக்கம் செய்ய
உரை
 
445. சூழ்வார் கண் ஆக ஒழுகலான், மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

445

பதிவிறக்கம் செய்ய
உரை
 
446. தக்கார் இனத்தனாய், தான் ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்.

446

பதிவிறக்கம் செய்ய
உரை
 
447. இடிக்கும் துணையாரை ஆள்வாரை, யாரே,
கெடுக்கும் தகைமையவர்.

447

பதிவிறக்கம் செய்ய
உரை
 
448. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும், கெடும்.

448

பதிவிறக்கம் செய்ய
உரை
 
449. முதல் இலார்க்கு ஊதியம் இல்லை;-மதலை ஆம்
சார்பு இலார்க்கு இல்லை, நிலை.

449

பதிவிறக்கம் செய்ய
உரை
 
450. பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே-
நல்லார் தொடர் கைவிடல்.

450

பதிவிறக்கம் செய்ய
உரை