தெரிந்து செயல் வகை
 
461. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி, வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து, செயல்!.

461

பதிவிறக்கம் செய்ய
உரை
 
462. தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு
அரும் பொருள் யாது ஒன்றும் இல்.

462

பதிவிறக்கம் செய்ய
உரை
 
463. ஆக்கம் கருதி, முதல் இழக்கும் செய்வினை
ஊக்கார், அறிவு உடையார்.

463

பதிவிறக்கம் செய்ய
உரை
 
464. தெளிவு இலதனைத் தொடங்கார்-இளிவு என்னும்
ஏதப்பாடு அஞ்சுபவர்.

464

பதிவிறக்கம் செய்ய
உரை
 
465. வகை அறச் சூழாது எழுதல், பகைவரைப்
பாத்திப் படுப்பது ஓர் ஆறு.

465

பதிவிறக்கம் செய்ய
உரை
 
466. செய்தக்க அல்ல செயக் கெடும்; செய்தக்க
செய்யாமையானும் கெடும்.

466

பதிவிறக்கம் செய்ய
உரை
 
467. எண்ணித் துணிக, கருமம்; துணிந்தபின்,
எண்ணுவம் என்பது இழுக்கு.

467

பதிவிறக்கம் செய்ய
உரை
 
468. ஆற்றின் வருந்தா வருத்தம், பலர் நின்று
போற்றினும், பொத்துப்படும்.

468

பதிவிறக்கம் செய்ய
உரை
 
469. நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு-அவரவர்
பண்பு அறிந்து ஆற்றாக்கடை.

469

பதிவிறக்கம் செய்ய
உரை
 
470. எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும்-தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு.

470

பதிவிறக்கம் செய்ய
உரை