வலி அறிதல்
 
471. வினை வலியும், தன் வலியும், மாற்றான் வலியும்,
துணை வலியும், தூக்கிச் செயல்.

471

பதிவிறக்கம் செய்ய
உரை
 
472. ஒல்வது அறிவது அறிந்து, அதன்கண் தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

472

பதிவிறக்கம் செய்ய
உரை
 
473. உடைத் தம் வலி அறியார், ஊக்கத்தின் ஊக்கி,
இடைக்கண் முரிந்தார் பலர்.

473

பதிவிறக்கம் செய்ய
உரை
 
474. அமைந்து ஆங்கு ஒழுகான், அளவு அறியான், தன்னை
வியந்தான், விரைந்து கெடும்.

474

பதிவிறக்கம் செய்ய
உரை
 
475. பீலி பெய் சாகாடும் அச்சு இறும்-அப் பண்டம்
சால மிகுத்துப் பெயின்.

475

பதிவிறக்கம் செய்ய
உரை
 
476. நுனிக் கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதி ஆகிவிடும்.

476

பதிவிறக்கம் செய்ய
உரை
 
477. ஆற்றின் அளவு அறிந்து ஈக; அது பொருள்
போற்றி வழங்கும் நெறி.

477

பதிவிறக்கம் செய்ய
உரை
 
478. ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும், கேடு இல்லை-
போகு ஆறு அகலாக்கடை.

478

பதிவிறக்கம் செய்ய
உரை
 
479. அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகி, தோன்றாக் கெடும்.

479

பதிவிறக்கம் செய்ய
உரை
 
480. உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை,
வள வரை வல்லைக் கெடும்.

480

பதிவிறக்கம் செய்ய
உரை