காலம் அறிதல்
 
481. பகல் வெல்லும், கூகையைக் காக்கை;- இகல் வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும், பொழுது.

481

பதிவிறக்கம் செய்ய
உரை
 
482. பருவத்தொடு ஒட்ட ஒழுகல்-திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.

482

பதிவிறக்கம் செய்ய
உரை
 
483. அரு வினை என்ப உளவோ-கருவியான்
காலம் அறிந்து செயின்.

483

பதிவிறக்கம் செய்ய
உரை
 
484. ஞாலம் கருதினும், கைகூடும்-காலம்
கருதி, இடத்தான் செயின்.

484

பதிவிறக்கம் செய்ய
உரை
 
485. காலம் கருதி இருப்பர்-கலங்காது
ஞாலம் கருதுபவர்.

485

பதிவிறக்கம் செய்ய
உரை
 
486. ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து.

486

பதிவிறக்கம் செய்ய
உரை
 
487. பொள்ளென ஆங்கே புறம் வேரார்; காலம் பார்த்து,
உள் வேர்ப்பர், ஒள்ளியவர்.

487

பதிவிறக்கம் செய்ய
உரை
 
488. செறுநரைக் காணின் சுமக்க; இறுவரை
காணின் கிழக்காம் தலை.

488

பதிவிறக்கம் செய்ய
உரை
 
489. எய்தற்கு அரியது இயைந்தக்கால், அந் நிலையே
செய்தற்கு அரிய செயல்.

489

பதிவிறக்கம் செய்ய
உரை
 
490. கொக்கு ஒக்க, கூம்பும் பருவத்து; மற்று அதன்
குத்து ஒக்க, சீர்த்த இடத்து.

490

பதிவிறக்கம் செய்ய
உரை