தொடக்கம் | ||
இடன் அறிதல்
|
||
491. | தொடங்கற்க எவ் வினையும்; எள்ளற்க-முற்றும் இடம் கண்டபின் அல்லது!. |
491 பதிவிறக்கம் செய்யஉரை |
492. | முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம் ஆக்கம் பலவும் தரும். |
492 பதிவிறக்கம் செய்யஉரை |
493. | ஆற்றாரும் ஆற்றி அடுப-இடன் அறிந்து போற்றார்கண் போற்றிச் செயின். |
493 பதிவிறக்கம் செய்யஉரை |
494. | எண்ணியார் எண்ணம் இழப்பர்-இடன் அறிந்து துன்னியார் துன்னிச் செயின். |
494 பதிவிறக்கம் செய்யஉரை |
495. | நெடும் புனலுள் வெல்லும் முதலை; அடும், புனலின் நீங்கின், அதனைப் பிற. |
495 பதிவிறக்கம் செய்யஉரை |
496. | கடல் ஓடா, கால் வல் நெடுந் தேர்; கடல் ஓடும் நாவாயும் ஓடா, நிலத்து. |
496 பதிவிறக்கம் செய்யஉரை |
497. | அஞ்சாமை அல்லால், துணை வேண்டா-எஞ்சாமை எண்ணி இடத்தான் செயின். |
497 பதிவிறக்கம் செய்யஉரை |
498. | சிறு படையான் செல் இடம் சேரின், உறு படையான் ஊக்கம் அழிந்து விடும். |
498 பதிவிறக்கம் செய்யஉரை |
499. | சிறை நலனும் சீரும் இலர் எனினும், மாந்தர் உறை நிலத்தொடு ஒட்டல் அரிது. |
499 பதிவிறக்கம் செய்யஉரை |
500. | கால் ஆழ் களரில் நரி அடும், கண் அஞ்சா வேல் ஆள் முகத்த களிறு. |
500 பதிவிறக்கம் செய்யஉரை |