தெரிந்து தெளிதல்
 
501. அறம், பொருள், இன்பம், உயிர் அச்சம், நான்கின்
திறம் தெரிந்து தேறப்படும்.

501

பதிவிறக்கம் செய்ய
உரை
 
502. குடிப் பிறந்து, குற்றத்தின் நீங்கி, வடுப் பரியும்
நாண் உடையான்கட்டே தெளிவு.

502

பதிவிறக்கம் செய்ய
உரை
 
503. அரிய கற்று, ஆசு அற்றார்கண்ணும், தெரியுங்கால்
இன்மை அரிதே, வெளிறு.

503

பதிவிறக்கம் செய்ய
உரை
 
504. குணம் நாடி, குற்றமும் நாடி, அவற்றுள்
மிகை நாடி, மிக்க கொளல்!.

504

பதிவிறக்கம் செய்ய
உரை
 
505. பெருமைக்கும், ஏனைச் சிறுமைக்கும், தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

505

பதிவிறக்கம் செய்ய
உரை
 
506. அற்றாரைத் தேறுதல் ஓம்புக; மற்று அவர்
பற்று இலர்; நாணார் பழி.

506

பதிவிறக்கம் செய்ய
உரை
 
507. காதன்மை கந்தா, அறிவு அறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்.

507

பதிவிறக்கம் செய்ய
உரை
 
508. தேரான், பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.

508

பதிவிறக்கம் செய்ய
உரை
 
509. தேறற்க யாரையும், தேராது; தேர்ந்த பின்,
தேறுக, தேறும் பொருள்.

509

பதிவிறக்கம் செய்ய
உரை
 
510. தேரான் தெளிவும், தெளிந்தான்கண் ஐயுறவும்,
தீரா இடும்பை தரும்.

510

பதிவிறக்கம் செய்ய
உரை