தொடக்கம் | ||
சுற்றம் தழால்
|
||
521. | பற்று அற்றகண்ணும் பழமை பாராட்டுதல் சுற்றத்தார்கண்ணே உள. |
521 பதிவிறக்கம் செய்யஉரை |
522. | விருப்பு அறாச் சுற்றம் இயையின், அறுப்பு அறா ஆக்கம் பலவும் தரும். |
522 பதிவிறக்கம் செய்யஉரை |
523. | அளவளாவு இல்லாதான் வாழ்க்கை-குளவளாக் கோடு இன்றி நீர் நிறைந்தற்று. |
523 பதிவிறக்கம் செய்யஉரை |
524. | சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல், செல்வம்தான் பெற்றத்தால் பெற்ற பயன். |
524 பதிவிறக்கம் செய்யஉரை |
525. | கொடுத்தலும் இன் சொலும் ஆற்றின், அடுக்கிய சுற்றத்தால் சுற்றப்படும். |
525 பதிவிறக்கம் செய்யஉரை |
526. | பெருங் கொடையான், பேணான் வெகுளி, அவனின் மருங்கு உடையார் மா நிலத்து இல். |
526 பதிவிறக்கம் செய்யஉரை |
527. | காக்கை கரவா கரைந்து உண்ணும்; ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள. |
527 பதிவிறக்கம் செய்யஉரை |
528. | பொது நோக்கான், வேந்தன் வரிசையா நோக்கின், அது நோக்கி வாழ்வார் பலர். |
528 பதிவிறக்கம் செய்யஉரை |
529. | தமர் ஆகி, தன்-துறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும். |
529 பதிவிறக்கம் செய்யஉரை |
530. | உழைப் பிரிந்து காரணத்தின் வந்தானை, வேந்தன் இழைத்து இருந்து, எண்ணிக் கொளல். |
530 பதிவிறக்கம் செய்யஉரை |