பொச்சாவாமை
 
531. இறந்த வெகுளியின் தீதே-சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு.

531

பதிவிறக்கம் செய்ய
உரை
 
532. பொச்சாப்புக் கொல்லும் புகழை-அறிவினை
நிச்சம் நிரப்புக் கொன்றாங்கு.

532

பதிவிறக்கம் செய்ய
உரை
 
533. பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை; அது உலகத்து
எப் பால் நூலோர்க்கும் துணிவு.

533

பதிவிறக்கம் செய்ய
உரை
 
534. அச்சம் உடையார்க்கு அரண் இல்லை; ஆங்கு இல்லை,
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.

534

பதிவிறக்கம் செய்ய
உரை
 
535. முன்னுறக் காவாது இழுக்கியான், தன் பிழை,
பின் ஊறு, இரங்கிவிடும்.

535

பதிவிறக்கம் செய்ய
உரை
 
536. இழுக்காமை யார்மாட்டும், என்றும், வழுக்காமை
வாயின், அஃது ஒப்பது இல்.

536

பதிவிறக்கம் செய்ய
உரை
 
537. அரிய என்று ஆகாத இல்லை-பொச்சாவாக்
கருவியான் போற்றிச் செயின்.

537

பதிவிறக்கம் செய்ய
உரை
 
538. புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும்; செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

538

பதிவிறக்கம் செய்ய
உரை
 
539. இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக-தாம் தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து!.

539

பதிவிறக்கம் செய்ய
உரை
 
540. உள்ளியது எய்தல் எளிதுமன்-மற்றும் தான்
உள்ளியது உள்ளப்பெறின்.

540

பதிவிறக்கம் செய்ய
உரை