தொடக்கம் | ||
செங்கோன்மை
|
||
541. | ஓர்ந்து, கண்ணோடாது, இறை புரிந்து, யார்மாட்டும் தேர்ந்து, செய்வஃதே முறை. |
541 பதிவிறக்கம் செய்யஉரை |
542. | வான் நோக்கி வாழும் உலகு எல்லாம்;-மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி. |
542 பதிவிறக்கம் செய்யஉரை |
543. | அந்தணர் நூற்கும், அறத்திற்கும், ஆதியாய் நின்றது-மன்னவன் கோல். |
543 பதிவிறக்கம் செய்யஉரை |
544. | குடி தழீஇக் கோல் ஓச்சும் மா நில மன்னன் அடி தழீஇ நிற்கும், உலகு. |
544 பதிவிறக்கம் செய்யஉரை |
545. | இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட- பெயலும் விளையுளும் தொக்கு. |
545 பதிவிறக்கம் செய்யஉரை |
546. | வேல் அன்று, வென்றி தருவது; மன்னவன் கோல்; அதூஉம், கோடாது எனின். |
546 பதிவிறக்கம் செய்யஉரை |
547. | இறை காக்கும், வையகம் எல்லாம்; அவனை முறை காக்கும், முட்டாச் செயின். |
547 பதிவிறக்கம் செய்யஉரை |
548. | எண் பதத்தான் ஓரா, முறை செய்யா, மன்னவன் தண் பதத்தான் தானே கெடும். |
548 பதிவிறக்கம் செய்யஉரை |
549. | குடி புறங்காத்து, ஓம்பி, குற்றம் கடிதல் வடு அன்று; வேந்தன் தொழில். |
549 பதிவிறக்கம் செய்யஉரை |
550. | கொலையில், கொடியாரை, வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களை கட்டதனொடு நேர். |
550 பதிவிறக்கம் செய்யஉரை |