கண்ணோட்டம்
 
571. கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான், உண்டு இவ் உலகு.

571

பதிவிறக்கம் செய்ய
உரை
 
572. கண்ணோட்டத்து உள்ளது உலகியல்; அஃது இலார்
உண்மை நிலக்குப் பொறை.

572

பதிவிறக்கம் செய்ய
உரை
 
573. பண் என் ஆம், பாடற்கு இயைபு இன்றேல்?-கண் என் ஆம்,
கண்ணோட்டம் இல்லாத கண்?.

573

பதிவிறக்கம் செய்ய
உரை
 
574. உளபோல் முகத்து எவன் செய்யும்-அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.

574

பதிவிறக்கம் செய்ய
உரை
 
575. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்; அஃது இன்றேல்,
புண் என்று உணரப்படும்.

575

பதிவிறக்கம் செய்ய
உரை
 
576. மண்ணொடு இயைந்த மரத்து அனையர்-கண்ணொடு
இயைந்து, கண்ணோடாதவர்.

576

பதிவிறக்கம் செய்ய
உரை
 
577. கண்ணோட்டம் இல்லவர் கண் இலர்; கண் உடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.

577

பதிவிறக்கம் செய்ய
உரை
 
578. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்து, இவ் உலகு.

578

பதிவிறக்கம் செய்ய
உரை
 
579. ஒறுத்தாற்றும் பண்பினார்கண்ணும், கண்ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.

579

பதிவிறக்கம் செய்ய
உரை
 
580. பெயக் கண்டும், நஞ்சு உண்டு அமைவர்-நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர்.

580

பதிவிறக்கம் செய்ய
உரை