ஒற்று ஆடல்
 
581. ஒற்றும், உரை சான்ற நூலும், இவை இரண்டும்
தெற்றென்க, மன்னவன் கண்.

581

பதிவிறக்கம் செய்ய
உரை
 
582. எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல், வேந்தன் தொழில்.

582

பதிவிறக்கம் செய்ய
உரை
 
583. ஒற்றினான் ஒற்றி, பொருள் தெரியா மன்னவன்
கொற்றம் கொளக் கிடந்தது இல்.

583

பதிவிறக்கம் செய்ய
உரை
 
584. வினைசெய்வார், தம் சுற்றம், வேண்டாதார், என்று ஆங்கு
அனைவரையும் ஆராய்வது-ஒற்று.

584

பதிவிறக்கம் செய்ய
உரை
 
585. கடாஅ உருவொடு கண் அஞ்சாது, யாண்டும்
உகா அமை வல்லதே-ஒற்று.

585

பதிவிறக்கம் செய்ய
உரை
 
586. துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து, ஆராய்ந்து,
என் செயினும் சோர்வு இலது-ஒற்று.

586

பதிவிறக்கம் செய்ய
உரை
 
587. மறைந்தவை கேட்க வற்று ஆகி, அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே-ஒற்று.

587

பதிவிறக்கம் செய்ய
உரை
 
588. ஒற்று ஒற்றித் தந்த பொருளையும், மற்றும் ஓர்
ஒற்றினால் ஒற்றி, கொளல்.

588

பதிவிறக்கம் செய்ய
உரை
 
589. ஒற்று ஒற்று உணராமை ஆள்க; உடன் மூவர்
சொல் தொக்க தேறப்படும்.

589

பதிவிறக்கம் செய்ய
உரை
 
590. சிறப்பு அறிய ஒற்றின்கண் செய்யற்க; செய்யின்,
புறப்படுத்தான் ஆகும், மறை.

590

பதிவிறக்கம் செய்ய
உரை