தொடக்கம் | ||
ஊக்கம் உடைமை
|
||
591. | உடையர் எனப்படுவது ஊக்கம்; அஃது இல்லார் உடையது உடையரோ, மற்று?. |
591 பதிவிறக்கம் செய்யஉரை |
592. | உள்ளம் உடைமை உடைமை; பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும். |
592 பதிவிறக்கம் செய்யஉரை |
593. | 'ஆக்கம் இழந்தேம்!' என்று அல்லாவார்-ஊக்கம் ஒருவந்தம் கைத்து உடையார். |
593 பதிவிறக்கம் செய்யஉரை |
594. | ஆக்கம் அதர் வினாய்ச் செல்லும்-அசைவு இலா ஊக்கம் உடையானுழை. |
594 பதிவிறக்கம் செய்யஉரை |
595. | வெள்ளத்து அனைய, மலர் நீட்டம்;-மாந்தர்தம் உள்ளத்து அனையது, உயர்வு. |
595 பதிவிறக்கம் செய்யஉரை |
596. | உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்! மற்று அது தள்ளினும், தள்ளாமை நீர்த்து. |
596 பதிவிறக்கம் செய்யஉரை |
597. | சிதைவிடத்து ஒல்கார், உரவோர்;-புதை அம்பின் பட்டுப் பாடு ஊன்றும் களிறு. |
597 பதிவிறக்கம் செய்யஉரை |
598. | உள்ளம் இலாதவர் எய்தார்-'உலகத்து வள்ளியம்' என்னும் செருக்கு. |
598 பதிவிறக்கம் செய்யஉரை |
599. | பரியது கூர்ங் கோட்டது ஆயினும், யானை வெரூஉம், புலி தாக்குறின். |
599 பதிவிறக்கம் செய்யஉரை |
600. | உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை; அஃது இல்லார் மரம்; மக்கள் ஆதலே வேறு. |
600 பதிவிறக்கம் செய்யஉரை |