மடி இன்மை
 
601. குடி என்னும் குன்றா விளக்கம், மடி என்னும்
மாசு ஊர, மாய்ந்து கெடும்.

601

பதிவிறக்கம் செய்ய
உரை
 
602. மடியை மடியா ஒழுகல்-குடியைக்
குடியாக வேண்டுபவர்!.

602

பதிவிறக்கம் செய்ய
உரை
 
603. மடி மடிக் கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
குடி மடியும், தன்னினும் முந்து.

603

பதிவிறக்கம் செய்ய
உரை
 
604. குடி மடிந்து, குற்றம் பெருகும்-மடி மடிந்து,
மாண்ட உஞற்று இலவர்க்கு.

604

பதிவிறக்கம் செய்ய
உரை
 
605. நெடு நீர், மறவி, மடி, துயில், நான்கும்
கெடும் நீரார் காமக் கலன்.

605

பதிவிறக்கம் செய்ய
உரை
 
606. படி உடையார் பற்று அமைந்தக்கண்ணும், மடி உடையார்
மாண் பயன் எய்தல் அரிது.

606

பதிவிறக்கம் செய்ய
உரை
 
607. இடிபுரிந்து, எள்ளும் சொல் கேட்பர்-மடிபுரிந்து
மாண்ட உஞற்று இலவர்.

607

பதிவிறக்கம் செய்ய
உரை
 
608. மடிமை குடிமைக்கண் தங்கின், தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்திவிடும்.

608

பதிவிறக்கம் செய்ய
உரை
 
609. குடி, ஆண்மையுள் வந்த குற்றம், ஒருவன்
மடி ஆண்மை மாற்ற, கெடும்.

609

பதிவிறக்கம் செய்ய
உரை
 
610. மடி இலா மன்னவன் எய்தும்-அடி அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.

610

பதிவிறக்கம் செய்ய
உரை