இடுக்கண் அழியாமை
 
621. இடுக்கண் வருங்கால் நகுக! அதனை
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்.

621

பதிவிறக்கம் செய்ய
உரை
 
622. வெள்ளத்து அனைய இடும்பை, அறிவு உடையான்
உள்ளத்தின் உள்ள, கெடும்.

622

பதிவிறக்கம் செய்ய
உரை
 
623. இடும்பைக்கு இடும்பை படுப்பர்-இடும்பைக்கு
இடும்பை படாஅதவர்.

623

பதிவிறக்கம் செய்ய
உரை
 
624. மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

624

பதிவிறக்கம் செய்ய
உரை
 
625. அடுக்கி வரினும், அழிவு இலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்.

625

பதிவிறக்கம் செய்ய
உரை
 
626. 'அற்றேம்!' என்று அல்லற்படுபவோ-'பெற்றேம்!' என்று
ஓம்புதல் தேற்றாதவர்.

626

பதிவிறக்கம் செய்ய
உரை
 
627. 'இலக்கம், உடம்பு இடும்பைக்கு' என்று, கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம், மேல்.

627

பதிவிறக்கம் செய்ய
உரை
 
628. இன்பம் விழையான், ‘இடும்பை இயல்பு’ என்பான்,
துன்பம் உறுதல் இலன்.

628

பதிவிறக்கம் செய்ய
உரை
 
629. இன்பத்துள் இன்பம் விழையாதான், துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.

629

பதிவிறக்கம் செய்ய
உரை
 
630. இன்னாமை இன்பம் எனக் கொளின், ஆகும், தன்
ஒன்னார் விழையும் சிறப்பு.

630

பதிவிறக்கம் செய்ய
உரை