அமைச்சு
 
631. கருவியும், காலமும், செய்கையும், செய்யும்
அருவினையும், மாண்டது-அமைச்சு.

631

பதிவிறக்கம் செய்ய
உரை
 
632. வன்கண், குடிகாத்தல், கற்று அறிதல், ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது-அமைச்சு.

632

பதிவிறக்கம் செய்ய
உரை
 
633. பிரித்தலும், பேணிக்கொளலும், பிரிந்தார்ப்
பொருத்தலும், வல்லது-அமைச்சு.

633

பதிவிறக்கம் செய்ய
உரை
 
634. தெரிதலும், தேர்ந்து செயலும், ஒருதலையாச்
சொல்லலும் வல்லது-அமைச்சு.

634

பதிவிறக்கம் செய்ய
உரை
 
635. அறன் அறிந்து, ஆன்று அமைந்த சொல்லான், எஞ்ஞான்றும்
திறன் அறிந்தான், தேர்ச்சித் துணை.

635

பதிவிறக்கம் செய்ய
உரை
 
636. மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதி நுட்பம்
யா உள, முன் நிற்பவை?.

636

பதிவிறக்கம் செய்ய
உரை
 
637. செயற்கை அறிந்தக்கடைத்தும், உலகத்து
இயற்கை அறிந்து, செயல்!.

637

பதிவிறக்கம் செய்ய
உரை
 
638. அறி கொன்று, அறியான் எனினும், உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.

638

பதிவிறக்கம் செய்ய
உரை
 
639. பழுது எண்ணும் மந்திரியின், பக்கத்துள் தெவ் ஓர்
எழுபது கோடி உறும்.

639

பதிவிறக்கம் செய்ய
உரை
 
640. முறைப்படச் சூழ்ந்தும், முடிவிலவே செய்வர்-
திறப்பாடு இலாஅதவர்.

640

பதிவிறக்கம் செய்ய
உரை