தொடக்கம் | ||
சொல் வன்மை
|
||
641. | 'நா நலம்' என்னும் நலன் உடைமை; அந் நலம் யா நலத்து உள்ளதூஉம் அன்று. |
641 பதிவிறக்கம் செய்யஉரை |
642. | ஆக்கமும், கேடும், அதனால் வருதலால், காத்து ஓம்பல், சொல்லின்கண் சோர்வு. |
642 பதிவிறக்கம் செய்யஉரை |
643. | கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய், கேளாரும் வேட்ப, மொழிவது ஆம்-சொல். |
643 பதிவிறக்கம் செய்யஉரை |
644. | திறன் அறிந்து சொல்லுக, சொல்லை; அறனும் பொருளும் அதனின் ஊங்கு இல். |
644 பதிவிறக்கம் செய்யஉரை |
645. | சொல்லுக சொல்லை-பிறிது ஓர் சொல் அச் சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து. |
645 பதிவிறக்கம் செய்யஉரை |
646. | வேட்பத் தாம் சொல்லி, பிறர் சொல் பயன் கோடல் மாட்சியின் மாசு அற்றார் கோள். |
646 பதிவிறக்கம் செய்யஉரை |
647. | சொலல் வல்லன், சோர்வு இலன், அஞ்சான், அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது. |
647 பதிவிறக்கம் செய்யஉரை |
648. | விரைந்து தொழில் கேட்கும் ஞாலம்-நிரந்து இனிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். |
648 பதிவிறக்கம் செய்யஉரை |
649. | பல சொல்லக் காமுறுவர் மன்ற- மாசு அற்ற சில சொல்லல் தேற்றாதவர். |
649 பதிவிறக்கம் செய்யஉரை |
650. | இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர்-கற்றது உணர விரித்து உரையாதார். |
650 பதிவிறக்கம் செய்யஉரை |